Today Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (16.01.2023)

தருமபுரி: சுபகிருது ஆண்டு தை மாதம் 2ம் தேதி (Today Rasi Palan) திங்கட்கிழமை. சந்திர பகவான் துலாம் ராசியில் பயணம் மேற்கொள்கிறார். பிற்பகல் 2.24 மணி வரை நவமி. பின்னர் தசமி. மாலை 3.03 மணி வரை சுவாதி. பின்னர் விசாகம். ரேவதி, அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.

மேஷம்: எதிர்காலம் பற்றிய கவலை உங்கள் மனதை அரித்துக்கொண்டே இருக்கும். ஒரு சிலர் கடன் வாங்கியாவது நினைத்த காரியத்தை சாதிப்பீர்கள். தொழில் எதிரிகள் செய்யும் பிரச்சினையால் மன உளைச்சலுக்கு தள்ளப்படுவர்.

ரிஷபம்: காணாமல் போன பொருட்கள் திரும்ப கிடைக்க நேரிடும். கால நேரம் பார்க்காமல் வேலை செய்து உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். ஆன்லைன் வர்த்தகங்களில் பாதிப்பை அடைவீர்கள். உறவினர்கள் மத்தியில் மரியாதை குறைவதை உணர்வீர்கள்.

மிதுனம்: சகோதர வகையில் ஆதாயம் பெறுவீர்கள். காதலியின் அலட்சியத்தால் மன சஞ்சலம் அடைவீர்கள். மருத்துவம், கணிதம், பொறியியல், சட்டம் படிப்பவர்கள் வெற்றி காண்பீர்கள். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்சனையை பேசி தீர்ப்பீர்கள்.

கடகம்: பணப்பயிர்களை நடவு செய்து விற்பனையில் சாதனை படைப்பீர்கள். நீண்டநாட்கள் நண்பரின் உதவியால் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். ஐடி ஊழியர்கள் அதிகச் சம்பளம் பெறுவீர்கள். ஆன்லைன் வர்த்தகங்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள்.

சிம்மம்: கூட இருந்தே குழி பறிக்கும் நண்பர்களை அடையாளம் காண்பீர்கள். கூட்டுத் தொழிலில் இருந்த சங்கடங்கள் விலகி சந்தோசம் கிடைக்கும். வாக்கு சாதுர்யத்தால் எல்ஐசியில் அதிக பாலிசி எடுப்பீர்கள். குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் எண்ணத்தைக் கைவிடுங்கள்.

கன்னி: கடனை அடைத்து மன நிம்மதி அடைவீர்கள். பழைய நண்பர்களின் உதவியை நாடுவீர்கள். அரசுப் பணியாளர்கள் பதவியில் மாற்றமும் ஊதிய உயர்வும் கிடைக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

துலாம்: தொழிலை விரிவுபடுத்த இரவு தூக்கத்தை தொலைப்பீர்கள். எதிர்பார்த்த அரசு வேலைகள் தாமதமாவதால் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுவீர். முதுகு வலியால் சிரமப்படுவீர்கள். வெளியூர் பயணங்களால் உடல் சோர்வும் மன உளைச்சலும் அடைவீர்கள்.

விருச்சிகம்: வீடு கட்டும் வேலையில் சுணக்கத்தை பார்ப்பீர்கள். ஆன்லைன் வர்த்தகங்களில் சிக்கலை உண்டாக்கும். அரசுப் பணியில் கோப்புகளை கையாளும்போது அதிக கவனம் தேவை. தேவையில்லாத வாக்குறுதிகளை யாருக்கும் வழங்காதீர்கள்.

தனுசு: வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட பல மடங்கு லாபம் கிடைக்கும். வாகன விற்பனையில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். கட்டுமானத் தொழிலில் இருப்பவர்கள் கணிசமான லாபம் கிடைக்கும். இல்லத்தரசியின் இதமான போக்கால் நிம்மதியாக தூங்குவீர்கள்.

மகரம்: மேற்படிப்புக்காக பிள்ளைகளை வெளிநாட்டிற்கு அனுப்புவீர்கள். சந்தோசங்களை அனுபவிப்பதற்கு ஆடம்பரமாகச் செலவு செய்வீர்கள். அடுத்தவருக்கு உதவி செய்வதன் மூலம் மதிப்பு, மரியாதை செல்வாக்கு உயத்திக் கொள்வீர்கள்.

கும்பம்: கணவன் மனைவி பிரச்சினையால் டென்ஷன் அடைவீர்கள். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைத்தாலும் செலவும் அதிகரித்து சிரமப்படுவீர்கள். உறவுகளுக்குச் செலவு செய்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பீர்கள்.

மீனம்: வேளாவேளைக்கு உணவருந்தக் கூட நேரம் கிடைக்காமல் வேலை செய்வீர்கள். வெளியூர்ப் பயணங்களினால் பயன் கிடைக்காது. நண்பர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்காமல் ஏமாற்றம் அடைவீர்கள். சந்திராஷ்டம என்பதால் நிதானமாக நடக்க வேண்டும்.