நிவர் புயல்: தமிழகம் முழுதும் நாளை அரசு விடுமுறை

நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுதும் நாளை அரசு விடுமுறை விடப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

நிவர் புயல் காரணமாக நாளை தமிழகம் முழுதும் அரசு விடுமுறை விடப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்காகவே அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளில் உள்ள அரசு அலுவலர்கள் மட்டும் நாளை பணிபுரிவார்கள்.

அவர்களுக்கு பணி நிலைமைக்கு ஏற்றவாறு விடுமுறை நீடிப்பது குறித்து முடிவெடுக்கப்படும். புயல் கரையை கடந்து சென்றுவிட்டது என அறிவிக்கப்படும் வரை மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை. நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்