ஆரணியில் சிலிண்டர் வெடித்து மூன்று பேர் உயிரிழப்பு

ஆரணியில் சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி, புதுகாமூர் பகுதியில் முத்தம்மாள் என்பவரது வீட்டில் இன்று(நவ.15) காலை சிலிண்டர் கசிவால் ஏற்பட்ட விபத்தில் காமாட்சி, ஹேமநாதன் என்ற சிறுவன், சந்திரா அம்மாள் ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும், நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்தத் துயர சம்பவத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.