மூன்று மாதம் பரோல் வழங்க கோரி சிறைத்துறை செயலருக்கு நளினி மனு

மூன்று மாதம் பரோல் வேண்டும் என சிறைத்துறை செயலருக்கு நளினி மனு அளித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் மத்தியச் சிறையிலும் அவரது மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நளினி புழல் சிறைக்கு மாற்றக் கோரி வழக்கு தொடர்ந்தார் ஆனால் நிர்வாக காரணங்களால் புழல் சிறைக்கு மாற்ற முடியாது என சிறைத்துறை பதிலளித்தது இதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நளினி மூன்று மாத பரோல் கேட்டு உள்துறை செயலாளருக்கு மனு எழுதி சிறைத் துறையினரிடம் அளித்தார்.

இதுகுறித்து நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி கூறியதாவது, சிறையில் உள்ள நளினி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவர் கண் புரை, பல் வலி, ரத்த சோகை, மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வருகிறார்.

இதற்காக ஆயுர்வேத, சித்த மருத்துவ முறையில் சிகிச்சைக்கு மூன்று மாத பரோல் வழங்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார். இதற்காக அனுமதி கிடைக்காது என்பதால் சிறைதுறை செயலாளருக்கும் அனுப்பியுள்ளது என்றார்.