சபரிமலையில் நடை திறப்பு: இன்று முதல் சாமி தரிசனம் காண பக்தர்கள் அனுமதி!!!

கரோனா அசச்சுருத்தல் காரணமாக ஏழு மாத காலங்களாக சபரிமலை கோவிலில் அனுமதி தடைபட்டு இருந்தது. இதனை தொடர்ந்து ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது, இன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று மாலை 5 மணிக்கு ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி சுதிர் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு, இரவில் நடை அடைக்கப்பட்டது.

இன்று (சனிக்கிழமை) முதல் 21-ந் தேதி வரை ஐப்பசி மாத பூஜை நடைபெறும். இந்த 5 நாட்களும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் இதற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஆன் லைனில் முன்பதிவு செய்து வரும் அய்யப்ப பக்தர்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி வழங்கப்படும். அதுவும், தினமும் 250 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர்.