அரசியலமைப்பு சட்ட தினத்தை கொண்டாட வேண்டும் – யுஜிசி உத்தரவு

நவம்பர் 26ஆம் தேதியன்று பிரதமர் மோடி அரசியலமைப்பு சட்ட தினத்தில் பங்கேற்று அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரையை வாசிக்க உள்ளார். இதனை பின்பற்றி பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் இந்த நிகழ்வை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. அதில் 1949ம் ஆண்டு அரசியலமைப்பு சட்டத்தை நம் நாடு செயல்படுத்திய நவம்பர் 26ந் தேதியை நினைவுக்கூறும் வகையில் “samvidhan divas” என்கிற பெயரில் அரசியலமைப்பு சட்டத்தை மத்திய அரசு கடைபிடித்து வருகிறது.