நவம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு

கொரோனா கட்டுப்பாடு பகுதிகளில் நவம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு குறைந்து வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 36,469 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவே கடந்த மாதாம் இந்தியா முழுவதும் நாளொன்றுக்கு சுமார் 60ஆயிரம் முதல் 90 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டிருந்தனர்.

கொரோனாவின் பாதிப்பு குறைவாகக் காணப்பட்டாலும் பண்டிகை காலங்கள் நெருங்கிவருவதால் மக்கள் கவனத்துடனே இருக்க வேண்டும் என எச்சரித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கொரோனா கட்டுப்பாடுப் பகுதிகளில் நவம்பர் 30 வரை ஊரடங்கை நீட்டிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.