குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த முதலமைச்சர்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை விஐபி பிரேக் தரிசனம் மூலம் திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டார். திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று மாலை தனது குடும்பத்தினருடன் காரில் திருமலைக்கு வந்தார். அவரை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முனிராமய்யா, தேவஸ்தான அதிகாரி பிரபாகர்ரெட்டி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

தொடர்ந்து ஏழுமலையான் கோவில் முன் இருக்கும் அகிலாண்டம் பகுதியில் கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினார் தமிழக முதல்வர். இதனை தொடர்ந்து இன்றே சென்னைக்கு திரும்புகிறார்.