சுஷாந்த் சிங் மரணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த எய்ம்ஸ் மருத்துவமனை

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம், தற்கொலையால் ஏற்பட்டது தான் என எய்ம்ஸ் மருத்துவமனையால் அமைக்கப்பட்ட தடயவியல் குழு தெரிவித்துள்ளது.

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்கில் பிணமாக மீட்கப்பட்டார். சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியது, பண மோசடியில் ஈடுபட்டதாக அவரின் காதலியும், நடிகையுமான ரியா சக்கரபோர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.

மேலும் நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கை போதைப்பொருள் வழக்குடன் தொடர்புபடுத்தி விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம், தற்கொலையால் ஏற்பட்டது தான் என எய்ம்ஸ் மருத்துவமனையால் அமைக்கப்பட்ட தடயவியல் குழு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here