சேகர் ரெட்டி மீதான வழக்கை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்

Supreme Court: தொழிலதிபர் சேகர் ரெட்டி மீதான சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம்.

தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரது உறவினர், ஆடிட்டர் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் 147 கோடி ரூபாய் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளும், சுமார் 34 கோடி ரூபாய்க்கு புதிய 2,000 ரூபாய் நோட்டுகளும், 178 கிலோ தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதில் `பண மதிப்பிழப்பு அறிவிப்பு வெளியான 24 நாட்களில் 34 கோடி ரூபாய்க்கு புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் எப்படி மாற்றப்பட்டது’ என்பது குறித்து சரியாக சேகர் ரெட்டியும், அவருடன் தொடர்புடைய சீனிவாசுலு, பிரேம்குமார் உள்ளிட்டோர் விளக்கமளிக்கவில்லை.

இதையும் படிங்க: Jai Bhim Movie: ஒருபுறம் விஸ்வரூபம் எடுக்கும் பிரச்னை; மறுபுறம் குவியும் விருதுகள்- ஜெய்பீம் புதிய அப்டேட்