இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் பிரபலம் இவர்தானாம்..

இந்த வருடமும் பிக் பாஸ் 4 மிக பிரம்மாண்டமாக தொடங்க பெற்றது. முதல் இரண்டு வாரம் எதிர் பார்த்த அளவுக்கு சுவாரசியம் இல்லாமல் இருந்தது. ஆனால் நாள் ஆக ஒவ்வொருவரின் சாயம் வெளுக்க ஆரம்பித்தது. ஒரு சின்ன விஷயத்தை கூட எப்படி ஊதி ஊதி பெரிதாக்குவதை அனிதா மற்றும் சனமை பார்த்து தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த வாரம் ரியோ, பாலா, ஆரி, அனிதா, சம்யுக்தா மற்றும் சுசி எலிமேஷனுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். நேற்று சனி கிழமை என்பதால் ஆண்டவரான கமலஹாசன் காட்சி தந்தார்.

கடந்த ஒரு வாரம் நிகழ்ந்ததை பற்றி போட்டியாளர்களிடம் கேள்விகளை எழுப்பி பல சுவாரசியமான தகவல்ககளை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது ஏற்றினார். மற்றும் 2 டாஸ்க்கை வைத்து கடைசியில் ஆரி மற்றும் ரியோவை சேவ் செய்து நிகழ்ச்சியை முடித்தார். இன்று மக்களால் குறைந்த வாக்குகளை பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் நபர் சுஜி என்று செய்திகள் வெளியாகியுள்ளது. அது மட்டும் இல்லாமல் பிக் பாஸ் வீட்டிற்கு ஒரு புதிய வரவு காத்திருக்கிறது.