பங்குச்சந்தைகளில் தொடர் ஏற்றம்

இந்திய பங்குச்சந்தைகள் இரண்டாவது நாளாக ஏற்றத்தில் வர்த்தகமாகின. சென்செக்ஸ் 150 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமாகின.

இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 182.55 புள்ளிகள் உயர்ந்து 40,614.15ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 47.30 புள்ளிகள் உயர்ந்து 11,920.35ஆகவும் வர்த்தகமாகின.

ஆசிய உள்ளிட்ட உலகளவில் பங்குச்சந்தைகள் சரிவுடன் இருந்த போதிலும் உள்நாட்டில் முதலீட்டாளர்கள் சில குறிப்பிட்ட பங்குகளை அதிகளவில் வாங்க தொடங்கியதாலும் இன்போசிஸ், எச்டிஎப்சி, டிசிஎஸ்., உள்ளிட்ட நிறுவன பங்குகள் அதிகம் ஏற்றம் கண்டதாலும் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் வர்த்தகமாகின. தொடர்ந்து காலை 11 மணியளவில் சென்செக்ஸ் 190, நிப்டி 47 புள்ளிகளும் உயர்ந்து வர்த்தகமாகின.