Teachers Counselling: பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு டிச.9ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை: Adjournment of Counselling for graduate teachers to 9th December. வரும் 28ம் தேதி நடைபெறவுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வரும் 28ம் தேதி நடைபெறவுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதுகலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு திட்டமிட்டபடி நவம்பர் 29ம் தேதி நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசு பள்ளிகளில் 01.08.2022 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்து ஆசிரியருடன் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்வது குறித்து கலந்தாய்வு நடைபெறுகிறது.

2022-23 கல்வியாண்டிற்கான 01.08.2022 நிலவரப்படி முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (BT & PG Staff Fixation) நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டு, அதனடிப்படையில் ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்பட்ட (Surplus Post With Person) முதுகலை / பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவல் மூலம் வருகின்ற 28.11.2022 பட்டதாரி ஆசிரியர்களுக்கும், 29.11.2022 முதுகலை ஆசிரியர்களுக்கும் EMIS இணையதள வாயிலாக (Online Deployment Counselling)நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 28.11.2022 அன்று நடைபெறவுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் (BT Deploymetn Counselling) கலந்தாய்வு மட்டும் நிருவாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுகிறது. இக்கலந்தாய்வு 09.12.2022ம் தேதி அன்று நடைபெறும்.

மேலும் முதுகலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு (PG Deployment Counselling) திட்டமிட்டபடி 29.11.2022 அன்று நடைபெறும் என்பதையும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

The recruitment consultation for graduate teachers to be held on 28th has been postponed due to administrative reasons.