Rs.3 crore fraud: தென்காசியில் அதிக வட்டி தருவதாக ரூ. 3 கோடி மோசடி

தென்காசி: In Tenkasi, people besieged the owner of a financial institution by locking the door of his house for fraud of Rs 3 crore. தென்காசியில் ரூ.3 கோடி மோசடி செய்ததாக நிதி நிறுவன உரிமையாளர் வீட்டுக் கதவை பூட்டி மக்கள் முற்றுகையிட்னர்.

தென்காசி மாவட்டம், கீழபாறையடி தெரு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகசாமி. திருமணமான இவர் ‘நியூ ரைஸ் ஆலயம்’ என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள மக்களிடம் அதிக வட்டிக்கு பணம் தருவதாக தெரிவித்து மக்களிடம் பணத்தை பெற்றுள்ளார்.

இந்நிலையில் ஒரு வருடமாக பணத்தை திரும்ப தராமல் ஏமாற்றி வருவதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்டவர்கள், அவரது வீட்டு கதவைப் பூட்டி வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கூறும்போது, அதிக வட்டிக்கு பணம் தருவதாக நம்பி, எங்கள் பகுதியில் உள்ள 80க்கும் மேற்பட்டோர் வீடுகளை அடகு வைத்தும், குழந்தைகளுக்காக சேர்த்து வைத்த பணம் என அனைத்தையும் செலுத்தினோம். எங்கள் பகுதியில் மட்டும் ரூ.3 கோடி மோசடி செய்துள்ளார்.

இந்நிலையில் வட்டியும், அசலும் திரும்பத் தரவில்லை, ஆறுமுகசாமியிடம் கேட்கும் போது உரிய பதிலும் அளிப்பதாக தெரியவில்லை. வேறு வழியின்றி அவரது வீட்டை பூட்டி முற்றுகையிட்டுள்ளோம். எங்களுடைய பணம் கிடைக்க உரிய வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.