Karthigai Deepam festival: திருவண்ணாமலை தீபத் திருவிழா: அன்னதானம் வழங்க 226 பேருக்கு அனுமதி

திருவண்ணாமலை: 226 people have been given permission to give alms during Thiruvannamalai Deepatri Festival. திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் அன்னதானம் வழங்க 226 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் காவல் தெய்வங்களின் 3 நாள் வழிபாடு நிறைவு பெற்றதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை கார்த்திகைத் தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றம் வேதமந்திரங்கள் முழங்க நேற்று நடைபெற்றது.

இதையொட்டி, நேற்று அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு (Temple opened at 3.30 am) அருணாசலேஸ்வர , உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன‌. பின்னர், விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வர , பராசக்தியம்மன், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி கோயில் தங்கக்கொடிமரம் அருகே அருள்பாலித்தனர்.

அதிகாலை 5.30 மணி முதல் 7 மணிக்குள் அருணாசலேஸ்வரர் சன்னதி எதிரே உள்ள தங்கக் கொடிமரத்தில், சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்க தீபத் திருவிழாவுக்கான ரிஷபக் கொடி ஏற்றப்பட்டது (Rishaba flag hoisted for Deepa festival).

இதன் பிறகு தினமும் காலை, இரவு வேளைகளில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெறும். டிசம்பர் 3 – ஆம் தேதி பஞ்ச ரதங்களின் தேரோட்டமும், 6 – ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமலை மீது மகா தீபமும் (Bharani Deepam and Maha Deepam are lighted on the 2,668 feet high hill) ஏற்றப்படுகிறது.

முன்னதாக‌, புதுப்பிக்கப்பட்ட வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் தேரின் வெள்ளோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதனை, சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, மாநில கைப்பந்து சங்கத்தின் துணைத் தலைவர் இரா.ஸ்ரீதரன், கோயில் இணை ஆணையர் கே.பி.அசோக்குமார், ஓய்வு பெற்ற இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் ஜெகந்நாதன் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடக்கி வைத்தனர்.

திருவண்ணாமலையில் 10 நாள்கள் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவின் 7 – ஆவது நாளில் பஞ்சரதங்களின் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். கரோனா ஊரடங்கு காரணமாக . 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் தேரோட்டம் நடைபெறவில்லை. 2 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தேரோட்டம் (After 2 years now Chariot take place) நடைபெறுவதால் பஞ்சரதங்களையும் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றன.

இதனிடையே கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கப்படும் இடங்களில் அன்னதானம் செய்ய விரும்புவோர் foscos.fssai.gov.in என்ற இணையதள முகவரியில் மூலமாகவோ அல்லது உணவு கட்டுப்பாடு துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தீபத்திருவிழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2,700 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது. டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகளை இயக்கப்படுகிறது.

இந்த நிலையில் தீபத் திருவிழாவையொட்டி, 22 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டிருந்த நிலையில், திருவண்ணாமலை நகரில் 112 பேருக்கும், கிரிவலப்பாதையில் 114 பேருக்கும் அன்னதானம் வழங்க நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார. நியமன ஆணை இல்லாமல் அன்னதானம் வழங்கக் கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.