Kabaddi player faints and dies: கபடி வீரர் மயங்கி விழுந்து உயிரிழப்பு: மீண்டும் சோக சம்பவம்

திருவண்ணாமலை: Kabaddi player faints and dies: ஆரணியில் கரணம் அடிக்கும் பயிற்சி மேற்கொண்ட கபடி வீரர் மயங்கி விழுந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் களத்துமேட்டு தெருவில் உள்ள மாரியம்மன் கோயிலில் கூழ்வார்க்கும் திருவிழா நடைபெற்றது. இங்கு கடந்த 8ம் தேதி முதல் திருவிழா நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக களத்துமேட்டு கே.எம்.எஸ். கபடி குழுவினர் கபடி போட்டிக்கான பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளனர். கரணம் அடிப்பதை அங்கிருந்த பொதுமக்களும் ஆர்வத்துடன் பார்த்து ஆரவாரம் செய்தும், கைதட்டியும் உற்சாகப்படுத்தியுள்ளனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த கபடி வீரரான வினோத்குமார் (34) கரணம் அடிக்கும் பயிற்சி மேற்கொண்டபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். மயங்கி விழுந்த அவரை உடனடியாக மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனையடுத்து, மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரிமருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்தவித முன்னேற்றமும் இன்றி, மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வினோத்குமார் உயிரிழந்தார்.

உயிரிழந்த வினோத்குமாருக்கு சிவகாமி என்ற மனைவியும், சந்தோஷ், கலையரசன் என்ற 2 மகன்களும் உள்ளனர். தற்போது வினோத் குமார் கரணம் அடிக்கும் காட்சி சமூக வளைதலங்களில் வைரலாக பரவி வருகிறது.

மிகுந்த ஆரோக்கியமாக இருந்த கபடி வீரர் கர்ணம் அடித்தபோது மயக்கம் அடைந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் கடந்த ஜூலை 25ம் தேதி, கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள மானடிகுப்பம் கிராமத்தில் மாவட்ட அளவிலான கபடிப் போட்டி (District level kabaddi tournament) நடைபெற்றது. இந்த போட்டியில் விமல்ராஜ் கலந்து கொண்டு விளையாடினார். அதில் துள்ளி குதித்து விளையாடிய அவர், எதிரணி வீரர் பிடிக்க முற்பட்டார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்த விமல்ராஜ், மார்பில் அடிபட்டு சுயநினைவில்லாமல் கிடந்தார்.

அதிர்ச்சியில் சக வீரர்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். The death of fainting while playing kabaddi near Panruti அவரை பரிசோதித்த டாக்டர்கள் விமல்ராஜ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அவரது உடல் இடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு புதைத்த போது, அவரது நண்பர்கள் அவர் கபடி விளையாடி பெற்ற கோப்பையினை உடன் வைத்து புதைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி அனைவரையும் நெகிழ்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.