Establishment of Internet Exchange: தமிழகத்தில் சென்னை, கோவையில் புதிய இணையப் பரிமாற்ற சேவை மையங்கள்

புதுடெல்லி: Establishment of Internet Exchange in Chennai and Coimbatore. தமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 3 இடங்களில் புதிய இணையப் பரிமாற்ற வாடிக்கையாளர் சேவை மையங்கள் தொடங்கப்படவுள்ளன.

மாநிலங்களவையில் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் எழுத்துப்பூர்வமாக அளித்த தகவலில் , இந்திய தேசிய இணையப் பரிமாற்ற அமைப்பானது 42 வாடிக்கையாளர் சேவை மையங்களை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் புதிய இணையப் பரிமாற்ற வாடிக்கையாளர் சேவை மையங்களை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தற்போது விசாகப்பட்டிணத்தில் புதிய இணையப் பரிமாற்ற வாடிக்கையாளர் சேவை மையம் தொடங்கப்படவுள்ளது.

இதன் மூலம் தகவல் தொழில்நுட்பத்துறை, சேவைத்துறை போன்றவைகள் பயன்பெறும். குறிப்பாக விசாகப்பட்டிணம் தகவல் தொழில்நுட்ப மையமாக உருவாவதற்கு உதவி அளிக்கும்.

இந்திய தேசிய இணையப் பரிமாற்ற அமைப்பின் புதியதாக உருவாக்கப்படவுள்ள 42 வாடிக்கையாளர் சேவை மையங்களில் தமிழ்நாட்டிற்கு சென்னை-1, சென்னை-2, கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் வரவிருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வரிசை எண்இடம்மாநிலம்
1திரியுபதிஆந்திரப் பிரதேசம்
2கவுகாத்திஅசாம்
3பாட்னாபீகார்
4ராய்பூர்சத்தீஸ்கர்
5புது தில்லிடெல்லி
6பஞ்சிம்கோவா
7அகமதாபாத்குஜராத்
8ராஜ்கோட்குஜராத்
9சூரத்குஜராத்
10வதோத்ராகுஜராத்
11குர்கான்ஹரியானா
12சிம்லாஹிமாச்சல பிரதேசம்
13ஸ்ரீநகர்ஜம்மு & காஷ்மீர்
14ஜம்முஜம்மு & காஷ்மீர்
15பெங்களூர்கர்நாடகா
16மங்களூர்கர்நாடகா
17இந்தூர்மத்திய பிரதேசம்
18போபால்மத்திய பிரதேசம்
19குவாலியர்மத்திய பிரதேசம்
20வாஷி, மும்பைமகாராஷ்டிரா
21சண்டிவாலி, மும்பைமகாராஷ்டிரா
22பாண்டிச்சேரிபாண்டிச்சேரி
23ஜெய்ப்பூர்ராஜஸ்தான்
24ஜோத்பூர்ராஜஸ்தான்
25சென்னை -1தமிழ்நாடு
26சென்னை – 2தமிழ்நாடு
27கோயம்புத்தூர்தமிழ்நாடு
28ஹைதராபாத்தெலுங்கானா
29அகர்தலாதிரிபுரா
30நொய்டாஉத்தரப்பிரதேசம்
31கான்பூர்உத்தரப்பிரதேசம்
32பிரயாக்ராஜ்உத்தரப்பிரதேசம்
33கோரக்பூர்உத்தரப்பிரதேசம்
34வாரணாசிஉத்தரப்பிரதேசம்
35ஆக்ராஉத்தரப்பிரதேசம்
36மீரட்உத்தரப்பிரதேசம்
37லக்னோஉத்தரப்பிரதேசம்
38டேராடூன்உத்தரகாண்ட்
39ஹல்த்வானிஉத்தரகாண்ட்
40கொல்கத்தாமேற்கு வங்காளம்
41பர்த்வான்மேற்கு வங்காளம்
42துர்காபூர்மேற்கு வங்காளம்