Customs seized gold bar: சென்னை விமான நிலையத்தில் ரூ.46.13 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டி பறிமுதல்

சென்னை: Customs seized unclaimed valued ₹46.13 lakh gold bar: சென்னை விமான நிலையத்தில் இன்று (2ம் தேதி) சுங்கத்துறையினரால் ரூ.46.13 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ 24 கேரட் தங்கக்கட்டி பறிமுதல் செய்யப்பட்டது.

சிங்கப்பூரில் இருந்து இன்று அதிகாலை சென்னை வந்த இன்டிகோ விமானத்தின் பின்பக்க கழிப்பறையை சோதனையிட்ட போது ரூ.46.13 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ 24 கேரட் தங்கக்கட்டி சென்னை விமான நிலைய சுங்கத்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து தங்கக்கட்டியை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் கே ஆர் உதய்பாஸ்கர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இதேபோல் கடந்த சில நாட்களாக பறிமுதல் செய்யப்பட்டவைகளின் விபரம்:

கடந்த 30ம் தேதி அன்று சென்னையில் இருந்து துபாய் செல்லும் ஒரு பார்சலை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அதை சோதனையிட்டதில் வெளிநாட்டு பணத்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.24.34 லட்சங்கள் ஆகும். இதேபோல், பாங்காக்கில் இருந்து 4 பார்சல்களை தடுத்து நிறுத்தி 95.37 கிலோ எடையுள்ள தங்க கட்டிகள் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டன.

கடந்த 28ம் தேதி, கொழும்பில் இருந்து வந்த மூன்று பயணிகள், தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்களை பரிசோதித்ததில், மலக்குடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க பேஸ்ட் மீட்கப்பட்டது. இது ரூ.59.23 லட்சம் மதிப்புள்ள 1.3 கிலோ கைப்பற்றப்பட்டது.

19ம் தேதியன்று கொழும்பில் இருந்து வந்த இரண்டு பேரை மடக்கி பிடித்தனர். வயிற்றுக்குள் விழுங்கியிருந்த ரூ.94.34 லட்சம் மதிப்புள்ள பல்வேறு ரத்தினக் கற்களை பறிமுதல் செய்தனர்.

20ம் தேதி, கொழும்பில் இருந்து வந்த பயணிகளிடம் மலக்குடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க பேஸ்ட் மூட்டைகள் 4.15 கிலோ தங்கம் மற்றும் பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் மற்றும் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு 2.01 கோடியாகும். 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

14ம் தேதி, ஒரு தான்சானிய பயணியைத் தடுத்து நிறுத்தினர். அவரிடமிருந்து ரூ.8.86 கோடி மதிப்புள்ள 1.266 கிலோ ஹெராயின் அடங்கிய 86 காப்ஸ்யூல்களை கைப்பற்றினர். அவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், துபாயில் இருந்து EK544 விமானத்தில் வந்த நபரை பரிசோதித்ததில், மலக்குடலில் தங்கம் பேஸ்ட் வடிவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.25 கிலோ எடையுள்ள 24K தூய்மையான ரூ.55.38 லட்சம் மதிப்புள்ள தங்கம் கைப்பற்றப்பட்டது. அவரை கைது செய்தனர்.

15ம் தேதி,, துபாயில் இருந்து வந்த இரண்டு பேரை தடுத்து நிறுத்தினர். பேஸ்ட் வடிவில் தங்கத்தை மலக்குடலில் மறைத்து வைக்கப்பட்ட 1.425 கிலோ எடையுள்ள ₹62.81 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கைப்பற்றினர். மேலும் எலக்ட்ரானிக் பொருட்கள், குங்குமப்பூ மற்றும் சிகரெட்டுகள் ரூ.18.97 லட்சம் மதிப்பில் மீட்கப்பட்டன. இருவரும் கைது செய்யப்பட்டனர்.

12ம் தேதி, எமிரேட்ஸ் விமானம் EK544 மூலம் துபாயிலிருந்து வந்த ஒருவரை கஸ்டம்ஸ் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். நபரை பரிசோதித்தபோது மலக்குடலில் மூன்று தங்க பேஸ்ட் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இதில் ரூ.41.83 லட்சம் மதிப்புள்ள 936 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.