இலங்கை பிரதமர் பதவியை ஏற்க தயார்- எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா அறிவிப்பு

Sajith Premadasa
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா

Sajith Premadasa: இலங்கையில் இடைக்கால அரசாங்கம் மற்றும் பிரதமர் பதவியை ஏற்று நடத்தத் தயார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், 4 நிபந்தனைகளுடன் ஆட்சதிப் பொறுப்பேற்கத் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, குறுகிய காலத்திற்குள் பதவி விலக அதிபர் சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் கடிதத்தில் இடம் பெற்றுள்ளது.

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க இன்று மாலை பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், சஜித் பிரேமதாசா பிரதமர் பதவி ஏற்க தயார் என்று அறிவித்துள்ளார்.

Opposition leader Sajith Premadasa accepts invite to form govt in Sri Lanka

இதையும் படிங்க: Sri Lanka Economic Crisis: மகிந்த ராஜபக்சே வெளிநாடு செல்ல தடை விதித்தது நீதிமன்றம்