T20 World Cup For The Visually Impaired Team: பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான டி20 உலகக்கோப்பை: சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணி

பெங்களூரு: பெங்களூருவில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான (T20 World Cup For The Visually Impaired Team) உலகக்கோப்பை டி20 கிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், இந்தியா, வங்காளதேச அணிகளுக்கு இடையில் மோதின.

இப்போட்டியில் முதலாவதாக களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 278 ரன்களை குவித்து சாதனை படைத்தது. அதன் பின்னர் 279 என்ற ரன் இலக்குடன் விளையாட துவங்கிய வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் 157 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

இதனால் 121 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. கடந்த 2012, 2017, 2022 என்ற 3 பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான டி20 உலகக்கோப்பை போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று சரித்திரம் படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பார்வை மாற்றுத்திறனாளிகள் உலக கோப்பையை வென்றிருப்பதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

முந்தைய செய்தியை பார்க்க:Ramadoss On Tnpsc Annual Planner: டி.என்.பி.எஸ்.சி. மூலமாக ஆண்டுக்கு 1754 நியமனங்கள் போதுமானவையல்ல: டாக்டர் ராமதாஸ் கேள்வி

முந்தைய செய்தியை பார்க்க:Pen monument ban case: பேனா நினைவுச்சின்னம்: மத்திய, மாநில அரசு பதிலளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு