கரோனா வைரஸ் பாதித்து மகாத்மா காந்தி கொள்ளுபேரன் உயிரிழப்பு!

கரோனா வைரஸின் கோவிட்-19 (COVID) பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டு மகாத்மா காந்தியடிகளின் கொள்ளு பேரன் சதீஷ் துபெலியா உயிரிழந்தார். இதனை அவரது சகோதரி உமா துபெலியா மெஸ்திரி உறுதிப்படுத்தினார். சதீஷ் துபெலியா, நிமோனியா காய்ச்சல் காரணமாக ஒரு மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

சதீஷின் மறைவிற்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.சதீஷின் நண்பர்கள் கூறுகையில், “நாங்கள் அதிர்ச்சியில் உள்ளோம். சதீஷ் மனிதாபிமான செயற்பாட்டாளர்” என்றார். துபெலியா வின் இறுதி சடங்கு ஏற்பாடுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.