சூரரைப்போற்று திரைப்படத்தை தடைகோரி வழக்கு..!

சூரரைப்போற்று திரைப்படத்தில் ஜாதியை தூண்டும் வகையில் பாடல் இடம்பெற்றுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று படத்தில் மண்டை உருண்டை மேல மனுசப்பய ஆட்டம் பாரு என்ன பாடல் இடம் பெற்றது.

இந்த பாடலில் கீழ்சாதி உடம்புக்குள்ள ஓடுறது சாக்கடையா அந்த மேல் சாதிக்காரன் எனக்கு ரெண்டு கொம்பு இருந்தா காட்டுங்கையா என்ற வரிகள் அனைத்து சாதியினரையும் அமைதியாக வாழும் தமிழகத்தில் பிரச்சனை ஏற்படுத்தும் என்பதால் படத்துக்கு தடை விதிக்கக் கோரி தருமபுரியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தார்.

அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் நீதிபதி இளந்திரையன் புகார் மீது சட்டப்படி பரிசீலித்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here