வருமான வரி வழக்கை ரத்து செய்யக் கோரி எஸ்.ஜே.சூர்யா மனு – தள்ளுபடி செய்தது ஐகோர்ட்டு

sj surya
வருமான வரி வழக்கை ரத்து செய்யக் கோரி எஸ்.ஜே.சூர்யா மனு

Actor S J Surya: கடந்த 2015- ஆம் ஆண்டு நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா மீது வருமான வரித்துறை சார்பில் ஆறு வழக்குகள் தொடரப்பட்டன. இதனை ரத்து செய்யக்கோரி, எஸ்.ஜே.சூர்யா தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது, வருமான வரி கணக்குக்கான மறு மதிப்பீட்டு நடைமுறைகள் நிலுவையில் இருப்பதால், வழக்குகளை ரத்து செய்யக்கோரி, எஸ்.ஜே.சூர்யா சார்பில் வாதிடப்பட்டது. ஆனால், முறையான சோதனைக்கு பிறகே வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக, வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பல முறை நோட்டீஸ் அனுப்பியும் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யாததால் எஸ்.ஜே சூர்யா இந்த வழக்குகளை எதிர்கொள்ள வேண்டும் எனக் கூறி வழக்கை ரத்து செய்யக் கோரிய அவரது மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: Sasikala: சென்னையில் சசிகலாவுடன் விஜயசாந்தி ரகசிய சந்திப்பு