உத்தரப் பிரதேசத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 6 குழந்தைகள் உட்பட 14 பேர்உயிரிழப்பு

உத்தரப் பிரதேசத்தில் ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில் 6 குழந்தைகள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். திருமண நிகழ்வுக்குச் சென்று திரும்பியபோது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். நபாப்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர்கள் திருமண விழாவிற்கு சென்றுவிட்டு, காரில் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். ப்ரயாக்ராஜ் – லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது, கார் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஆறு குழந்தைகள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற மாணிக்பூர் போலீசார், சடலங்களை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.