‘மகா சமுத்திரம்’ படப்பிடிப்பு தொடக்கம்!

சித்தார்த் நடிப்பில் உருவாகவுள்ள ‘மகா சமுத்திரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

ஏ.கே என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்கவுள்ள இந்த திரைப்படத்தில் சித்தார்த், சர்வானந்த், அதிதி ராவ், அனு இமானுவேல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

காதல் கலந்த ஆக்ஷன் திரைப்படமாக உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று (டிசம்பர் 7) தொடங்கியுள்ளது. தமிழ் படங்களில் மட்டுமே கவனம் செலுத்திய நடிகர் சித்தார்த் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் தெலுங்கு படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.