மகாராஷ்டிராவில் பாலியல் தொழிலாளிகளுக்கு மாதம் 5,000 நிதியுதவி

இந்நிலையில் இந்தியாவிலேயே முதன்முறையாக கொரோனா காலத்தில் வருமானம் இன்றி அவதிப்படும் பாலியல் தொழிலாளிகளுக்கு நிவாரண உதவி அளிக்க மகாராஷ்டிரா அரசு தீர்மானித்துள்ளது. இந்தியாவிலேயே மகாராஷ்டிர மாநிலத்தில் தான் கொரோனா மிக அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாநிலத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 18 லட்சத்தை தாண்டிவிட்டது.

இந்த மாநிலத்தில் தான் தினசரி கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. நேற்று 6,406 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டது. மரண எண்ணிக்கையும் இங்கு தான் அதிகமாகும். இதனால் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தற்போது மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.