பொங்கல் வரையில் பள்ளிகள் திறக்காது?

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதியை பொங்கல் வரையில் தள்ளிவைக்க வேண்டும் என்று பட்டதாரி ஆசிரியர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

தமிழக பட்டதாரி ஆசிரியர் சங்க நிறுவனர் தலைவர் மாயவன், முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், “தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது பற்றி ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பெற்றோரின் கருத்துக்களை அறிந்து கொண்டு அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவிப்பை நாங்கள் பாராட்டுகிறோம்.

கொரோனா குறைந்து வருகின்ற நாடுகளில் கூட தற்போது மேலும் வேகம் எடுத்துள்ளது. அதனால் தமிழ்நாட்டில் பள்ளிகளை 16ஆம் தேதி திறக்கப்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு மறுபரிசீலனை செய்து பள்ளிகள் திறக்கப்படும் தேதியை பொங்கல் திருநாள் வரையில் தள்ளி வைக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.