ரிலையன்ஸ் நிறுவனங்களை ஏலம் கேட்க காலக்கெடு நீட்டிப்பு

கடனில் மூழ்கியுள்ள அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தின் ஒரு பகுதியான ரிலையன்ஸ் கேப்பிட்டல் லிமிடெட் பங்குகளின் ஏலத்திற்கான ஒப்பந்த புள்ளியை சமர்ப்பிக்கும் காலக்கெடு டிசம்பர் 17ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஏல கேட்பதற்கான ஒப்பந்த புள்ளியை சமர்பிப்பதற்கான இறுதி தேதி டிசம்பர் 1ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.