ஏமனில் சிக்கித்தவித்த 14 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

 ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் சிறைபிடிக்கப்பட்டு, 10 மாதங்களாக அவதிப்பட்டு வந்த 14 இந்திய கடற்படையினர் துபாயிலிருந்து நேற்று தாயகம் திரும்பினர்.

இந்த 14 பேரும் கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி ஏமன் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் சிறைபிடிக்கப்பட்டனர் என்று ஜிபூட்டியில் உள்ள இந்திய தூதரகம் அறிக்கை வெளியிட்டு இருந்தது.

அதன் பிறகு இந்திய தூதரகம் எடுத்த பலகட்ட முயற்சிகளின் பலனாக இவர்கள் 14 பேரும் தற்போது மீட்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து இவர்கள் நேற்று இரவு துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து மும்பைக்கு கிளம்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.