ஓட்டுன்னு போட்டா ரஜினிக்கு தான்: டுவிட்டரில் டிரண்டிங்

டிகர் ரஜினி அரசியலுக்கு வருவதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், #ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான் என்னும் ஹேஷ்டேகை டிரண்டாக்கி ரசிகர்கள் வரவேற்று வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் அரசிலுக்கு வரவேண்டும் என கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளாக ரசிகர்கள் தவம்கிடக்க, ரஜினியோ அரசியல் நிலைப்பாட்டை உறுதியாக கூறாமல் காலம் தாழ்த்தி வந்தார். பல வருடங்களுக்கு பிறகு, தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளதாகவும், தான் அரசியலுக்கு வருவது உறுதி எனவும் கடந்த 2017ம் ஆண்டு திட்டவட்டமாக கூறினார்.

ஆனால், எப்போது, எப்படி என்பதை தெளிவுப்படுத்தாமல் மீண்டும் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தினார். ரசிகர்களோ பல வருட ஏக்கத்திற்கு இப்போதாவது அரசியல் வருவது குறித்த அறிவிப்பை வெளியிட்டதாக ஆறுதல்படுத்திக்கொண்டனர்.