பிரதமர் மோடி மீனவர்களின் பாதுகாவலர் – பாஜக மாநில தலைவர் எல்.முருகன்

பிரதமர் மோடி மீனவர்களின் பாதுகாவலராக செயல்படுவதாக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக பா.ஜ.க மீனவர் பிரிவின் செயற்குழு கூட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய எல்.முருகன், பா.ஜ.க. ஆட்சியில் ஒரு துப்பாக்கிச்சூடும் நடைபெறாமல், மீனவர்களின் பாதுகாவலராக பிரதமர் மோடி செயல்படுகிறார் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு மீனவர் கூட துப்பாக்கிச்சூடு காரணமாக காயமடைந்த சம்பவமோ, உயிரிழந்த சம்பவமோ நடைபெறவில்லை என்றார்.