MNM Party website hacked: மக்கள் நீதி மய்யம் இணையதளம் முடக்கம்

சென்னை: It has been reported that the website of the Makkal Needhi Maiam has been hacked today. மக்கள் நீதி மய்யத்தின் இணையதளம் இன்று முடக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமல்ஹாசன், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியுடன் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொண்டதற்குப்பின், காங்கிரஸ் கட்சியுடன் மக்கள் நீதி மய்யம இணைவது குறித்து ஊகங்கள் எழுந்தன.

இதனைத்தொடர்ந்து இன்று, வரவிருக்கும் 2024 பொதுத் தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்க்கும் செய்தியை இணையதளத்தில் பதிவிடப்பட்டது. இந்த செய்தி வெளியிட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, மக்கள் நீதி மய்யத்தின் இணையதளம் முடக்கம் செய்யப்பட்டதாக ஒரு ட்வீட்டை வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் “குடியரசு தினத்தை கொண்டாடிய ஒரு நாளுக்குப் பிறகு இன்று ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளோம். மக்கள் நீதி மய்யம் இந்திய தேசிய காங்கிரஸுடன் இணைய முடிவு செய்துள்ளதாக இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்கு தெரிவிக்கிறோம்.” மக்கள் நீதி மய்யத்தின் இணையதளத்தில் சில நிமிடங்களுக்குப் பிறகு இந்தத் தகவல் அடங்கிய பக்கம் கிடைக்கவில்லை.

மக்கள் நீதி மய்யம் தனது அதிகாரபூர்வ இணையதளம் தீயவர்களால் ஹேக் செய்யப்பட்டதாக ட்வீட்டில் பதிலடி கொடுத்துள்ளது. “ஜனநாயக சக்திகளை ஒடுக்குபவர்களின் தவறான செயல்களுக்கு நாங்கள் பயப்படாமல் உரிய பதிலடி கொடுப்போம்” என்று ட்வீட் செய்துள்ளது.