160 பேரை கற்பழித்த குற்றவாளி கைது

160 பேரை கற்பழித்த குற்றவாளியை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

160 பாலியல் பலாத்காரங்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளை செய்ததாக, 52 வயது உடைய இத்தாலி நாட்டை சேர்ந்த ஒருவரை பிரான்ஸ் போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் ஜெர்மன் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அக்டோபர் 7 ஆம் தேதி பிரான்ஸ் போலீசாருக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட குற்றவாளி, எல்லை தாண்டி சென்று கிழக்கு பிரான்சில் உள்ள அல்சேஸில் பகுதியில் குடியேற திட்டமிட்டுள்ளதாக போலீஸாருக்கு துப்பு கிடைத்தது. இதனையடுத்து அதிரடி நடவடிக்கையில் களமிறங்கிய பிரான்ஸ் போலீசார் பலநாள் தேடப்பட்டு வந்த அந்த காமக் கிழவனை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் அவன் ஜெர்மனியிடம் ஒப்படைக்கப்பட உள்ளான்.

முதல் கட்ட விசாரணையில் கடந்த 2000 முதல் 2014 வரையான காலகட்டத்தில் இளம்பெண்களையும் சின்னஞ்சிறு சிறுவர்களையும் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் அந்த நபரை தேடி வந்துள்ளனர். ஜெர்மனி அதிகாரிகளும் அந்த நபர் மீது 122 வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல்வேறு வழக்குகள் அந்த நபர் மீது பதிவு செய்ய்ப்பட்டு உள்ளது. பல ஆண்டுகளாக சொந்த மகளையே அந்த கிழவன் துஷ்பிரயோகம் செய்துள்ளதை பிரான்ஸ் போலீசார் உறுதி செய்துள்ளனர்.