நேருவின் 131ஆவது பிறந்தநாளுக்கு மோடி அஞ்சலி!!!

ஜவஹர்லால் நேருவின் 131ஆவது பிறந்தநாளான இன்று பிரதமர் மோடி, நேருவுக்கு ட்விட்டரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று (நவ.14) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ”நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.