PM lays foundation stone and dedicates various projects: குஜராத்தில் ரூ.3400 கோடி மதிப்பு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல்

சூரத்: PM lays foundation stone and dedicates various projects. சூரத்தில் ரூ.3400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

குஜராத் மாநிலம், சூரத்தில் ரூ. 3400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டியதுடன், முடிவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். சாலை உள்கட்டமைப்பு பணிகள் மற்றும் வைர ஆராய்ச்சி மற்றும் வணிக நகரத்தின் பிரதான நுழைவாயிலின் முதல் கட்டத்தை பிரதமர் திறந்து வைத்தார். திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான அடிக்கல்லையும் பிரதமர் நாட்டினார். மேலும், டாக்டர் ஹெட்கேவார் பாலம் முதல் பீம்ராட்-பம்ரோலி பாலம் வரை 87 ஹெக்டேர் பரப்பளவில் கட்டப்பட்டு வரும் பல்லுயிர் பூங்காவிற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். சூரத்தில் உள்ள அறிவியல் மையத்தில் கோஜ் அருங்காட்சியகத்தையும் பிரதமர் திறந்து வைத்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், புனிதமான நவராத்திரி காலத்தில், சூரத்தில் பல திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்கும், வரவிருக்கும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி தெரிவித்தார். நவராத்திரி விரதத்தைக் கடைப்பிடிக்கும் தன்னைப்போன்றவர்களுக்கு சிறந்த உணவு வகைகளைக் கொண்ட சூரத்துக்கு வருவது கொஞ்சம் சிரமமாக இருக்கிறது என்று அவர் நகைச்சுவையுடன் குறிப்பிட்டார். 75 அமிர்த நீர்நிலைப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். சூரத் நகரம் மக்களின் ஒற்றுமை மற்றும் பொது பங்கேற்பு ஆகிய இரண்டிற்கும் ஒரு அற்புதமான உதாரணம் என்று பிரதமர் குறிப்பிட்டார். சூரத்தின் மிகப்பெரிய சிறப்பம்சத்தை எடுத்துரைத்த பிரதமர், இது உழைப்பை மதிக்கும் நகரம் என்று கூறினார். சூரத் மண்ணில் இந்தியாவின் எல்லாப் பகுதி மக்களும் வசிப்பதாகக் கூறிய அவர், இது – ஒரு வகையான மினி ஹிந்துஸ்தான் என்று கூறினார்.

இந்த நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களின் போது, பொதுத்துறை மற்றும் தனியார் கூட்டாண்மை பற்றி விவாதிக்கப்பட்டது, சூரத் மக்கள், பொதுத்துறை, தனியார் கூட்டாண்மை ஆகியவற்றுக்கு எடுத்துக்காட்டு என்று பிரதமர் குறிப்பிட்டார். இவை இந்த மாதிரி சூரத்தை சிறப்பானதாக்குகிறது என்று மோடி மேலும் கூறினார். இன்று, சூரத் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக உள்ளது. தொற்றுநோய்கள் மற்றும் வெள்ளத்தால் நகரத்தின் பெயர் இழிவுபடுத்தப்பட்ட நாட்களில் இருந்து வெகு தொலைவுக்கு அது வந்துவிட்டது என்று அவர் கூறினார். சூரத்தின் குடிமை வாழ்வில் பல்லுயிர் பூங்காவின் நன்மைகளை அவர் விரிவாகக் கூறினார்.

இரட்டை எஞ்சின் அரசு அமைந்த பிறகு ஏற்பட்ட நேர்மறையான விளைவுகளை எடுத்துரைத்த பிரதமர், சூரத்தின் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்கு வழங்கப்படும் வீடுகள் மற்றும் இதர வசதிகள் கணிசமாக உயர்ந்துள்ளதாகக் கூறினார். ஆயுஷ் மான் பாரத் திட்டத்தில் இருந்து பெறப்பட்ட பலன்களை கோடிட்டுக் காட்டிய பிரதமர், நாட்டில் இதுவரை சுமார் 40 மில்லியன் ஏழை நோயாளிகள் இலவச சிகிச்சை பெற்றுள்ளனர் என்று சுட்டிக்காட்டினார். 32 லட்சத்துக்கும் அதிகமான நோயாளிகள் குஜராத்தைச் சேர்ந்தவர்கள், சுமார் 1.25 லட்சம் பேர் சூரத்தை சேர்ந்தவர்கள்” என்று பிரதமர் மேலும் கூறினார்.

சூரத்தின் ஜவுளி மற்றும் வைர வணிகத்தைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், இது நாடு முழுவதும் உள்ள பல குடும்பங்களின் வாழ்க்கையைத் தாங்குகிறது என்று குறிப்பிட்டார். டிரீம் சிட்டி எனப்படும் கனவு நகரத் திட்டம் நிறைவடையும் போது, உலகின் பாதுகாப்பான மற்றும் வசதியான வைர வர்த்தக மையமாக சூரத் உருவாகும் என்று பிரதமர் மேலும் சுட்டிக்காட்டினார். நகரின் உள்கட்டமைப்பு மேம்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், நகரத்திலிருந்து விமான நிலையத்துக்குச் செல்லும் சாலை இணைப்பு சூரத்தின் கலாச்சாரம், செழுமை மற்றும் நவீனத்தை பிரதிபலிக்கிறது என்றார். தில்லியில் விமான நிலையத்தின் தேவைக்கு அதிக கவனம் செலுத்தாத அப்போதைய அரசைப் பற்றி பிரதமர் விளக்கினார். “இன்று பாருங்கள், இங்கிருந்து எத்தனை விமானங்கள் இயக்கப்படுகின்றன, ஒவ்வொரு நாளும் எத்தனை பேர் இங்கு இறங்குகிறார்கள்” என்று பிரதமர் சுட்டிக்காட்டிப் பேசினார். சூரத் மெட்ரோவுக்கு ஒப்புதல் தேவைப்படும்போது எழுந்த இதேபோன்ற சூழ்நிலையையும் மோடி நினைவு கூர்ந்தார்.

சரக்குப் போக்குவரத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், எந்த ஒரு தொழிலுக்கும் அதன் அர்த்தம் என்ன என்பதை சூரத் மக்கள்தான் அறிவார்கள் என்றார். தேசிய சரக்குப்போக்குவரத்து கொள்கை குறித்துப் பேசிய பிரதமர், பன்னோக்கு மாதிரி இணைப்புக்கான மிகப்பெரிய திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார். ஹசிரா கோகா ரோபோக்ஸ் படகு சேவையானது ரோபோக்ஸ் வழியாக 10-12 மணிநேரத்திலிருந்து 3-4 மணிநேரமாக 400 கிமீ சாலை தூரத்தை வியத்தகு முறையில் குறைப்பதன் மூலம் நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்துகிறது. சூரத்தில் இருந்து காசி மற்றும் கிழக்கு உத்தரபிரதேசத்திற்கு இணைப்பு பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், சாலை வழியாக சரக்குகள் கொண்டு செல்லப்பட்டு வந்த நிலையில், இப்போது ரயில்வே மற்றும் கடலோரத் துறைகள் சரக்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தனித்துவமான கண்டுபிடிப்புகளைக் கொண்டு வந்துள்ளன என்றும் கூறினார். “ரயில்வே தனது பெட்டிகளின் வடிவமைப்பை சரக்குகளை எளிதில் பொருத்தும் வகையில் மாற்றியமைத்துள்ளது. இதற்காக ஒரு டன் கொள்கலன்களும் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த கொள்கலன்கள் எளிதாக ஏற்றப்பட்டு இறக்கப்படுகின்றன. முதற்கட்ட வெற்றிக்குப் பிறகு தற்போது சூரத்தில் இருந்து காசிக்கு புதிய ரயில் இயக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ரயில் சூரத்திலிருந்து காசிக்கு சரக்குகளை எடுத்துச் செல்லும்.

டைமண்ட் சிட்டி அடையாளப்படுத்தப்பட்ட சூரத் , பாலம் நகரமாக மாறி தற்போது மின்சார வாகன நகரமாக மாறுவது குறித்து பிரதமர் கருத்து தெரிவித்தார். நகரத்தில் மின்சார வாகனங்களின் வருகையை வலியுறுத்திய பிரதமர், சூரத் மிக விரைவில் மின்சார வாகனங்களுக்கு பெயர் பெறும் என்றும் கூறினார். தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் மின்சார வாகனங்களை இயக்குவதற்கு மத்திய அரசு அரசுகளுக்கு உதவுவதாகவும், நாட்டின் மற்ற நகரங்களுடன் ஒப்பிடும்போது சூரத் இந்த விஷயத்தில் ஒரு படி மேலே இருப்பதாகவும் மோடி குறிப்பிட்டார். “இன்று சூரத் நகரில் 25 சார்ஜிங் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன, அதே எண்ணிக்கையிலான நிலையங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் சூரத்தில் 500 சார்ஜிங் நிலையங்களை அமைப்பதில் இது ஒரு பெரிய படியாகும்.

பிரதமர் தமது உரையின் முடிவில், சூரத்தில் கடந்த இரண்டு தசாப்தங்களாக ஏற்பட்டுள்ள விரைவான வளர்ச்சி குறித்து பிரதமர் கவனத்தை ஈர்த்தார். வரும் ஆண்டுகளில் வளர்ச்சி வேகம் மட்டுமே அதிகரிக்கும் என்று குறிப்பிட்டார். “இரட்டை இயந்திர அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையின் வடிவத்தில் இந்த வளர்ச்சி இன்று பிரதிபலிக்கிறது. நம்பிக்கை வளரும்போது, முயற்சி வளரும்போது, நாட்டின் வளர்ச்சியின் வேகம் அனைவரது முயற்சியால் துரிதப்படுத்தப்படுகிறது” என்று பிரதமர் மேலும் கூறினார்.

குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி ஆர் பாட்டீல் மற்றும் பிரபுபாய் வாசவம், மத்திய இணை அமைச்சர் தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் மற்றும் குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.