பொட்ரோல், டீசல் விலை மூன்றாவது நாளாக உயர்வு!

சுமார் இரண்டு மாதங்களாக எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை இன்று மூன்றாவது நாளாக தொடர்ந்து உயர்ந்துள்ளது.

டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு எட்டு பைசா உயர்த்தப்பட்டு 81.46 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல டீசல் விலையும் லிட்டருக்கு 19 பைசா உயர்த்தப்பட்டு 70.88 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த முன்று நாள்களில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு மொத்தம் 40 பைசாவும் டீசல் விலை 61 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.

முன்னதாக, பெட்ரோல் விலை கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி முதலும் டீசல் விலை அக்டோபர் 2ஆம் தேதி முதலும் எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.