“ஒத்த செருப்பு” திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிப்பு

இயக்குநர் பார்த்திபன் இயக்கி, நடித்த “ஒத்த செருப்பு” திரைப்படத்திற்கு தேசிய விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும் வகையில் தனி நபராக படம் முழுவதும் கலக்கிய பார்த்திபனுக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான ஹவுஸ் ஓனர் திரைப்படத்துக்கும் மத்திய அரசு விருது அறிவித்துள்ளது.