ஆஸ்கார் விருதுக்கு போகும் ஜல்லிக்கட்டு

பிரபல இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசெரி இயக்கத்தில் வெளியான மலையாள சினிமா ‘ஜல்லிக்கட்டு’ ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கடந்த வருடம் இவர் ஜல்லிக்கட்டு என்ற படத்தை இயக்கினார். ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், சாபு மோன் உள்பட பலர் நடித்த இந்த படம் பல சர்வதேச விருதுகளை பெற்றுள்ளது. கடந்த வருடம் திருவனந்தபுரத்தில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் இந்த படத்தை இயக்கிய லிஜோ ஜோசுக்கு சிறந்த இயக்குனர் விருது கிடைத்தது.

இதேபோல இந்த ஆண்டின் ஆசிய சினிமா விருதுகளுக்கு சிறந்த இசை மற்றும் ஒளிப்பதிவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது தவிர டொரன்டோ சர்வதேச திரைப்பட விழா, லண்டன் திரைப்பட விழா உட்பட பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் இந்தப் படம் திரையிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் கேரள அரசின் சினிமா விருதுகள் இந்தப் படத்திற்கு கிடைத்துள்ளன.