ரூ.50க்கு அசத்தலான புதிய ஆதார் அட்டை!

ஆதார் அட்டையை மழையில் நனையாமல் பாதுகாப்பாகவும், கிழியாமலும், சேதமாகாமல் பத்திரமாக வைக்கவும் நாம் அதிக கவனம் எடுத்துக் கொள்கிறோம். அதற்கான விடிவுகாலமாக, ஏடிஎம் அட்டைகளைப் போன்று பிவிசி.யால் ஆன ஆதார் அட்டையை இந்தியாவின் தனித்துவமான அடையாள ஆணையம் வெளியிட்டுள்ளது.

பி.வி.சி.யால் ஆன புதிய ஆதார் அட்டையை 50 ரூபாய்க்கு இந்தியாவின் தனித்துவமான அடையாள ஆணையம் (UIDAI) வெளியிட்டுள்ளது.

இப்போது பி.வி.சி அட்டையில் ஆதார் அட்டையை (Aadhaar Card) மீண்டும் அச்சிடலாம் என்று ஆதார் ஆணையம் ட்வீட் செய்துள்ளது. இந்த அட்டையை உங்கள் ஏடிஎம் அட்டையைப் போலவே எளிதில் வைத்துக்கொள்ள முடியும்.எந்தவொரு காலநிலையிலும் ஆதார் பி.வி.சி அட்டை முற்றிலும் பாதுகாப்பானதாக இருக்கும். இனி ஆதார் அட்டை ஈரமாவது குறித்தோ, கிழிவது குறித்தோ, கசங்குவது குறித்தோ கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. பி.வி.சி கார்டுகளின் வடிவத்தில் வரும் புதிய ஆதார் அட்டை உறுதியானதாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here