2021ஆம் ஆண்டு மிக மோசமானதாக இருக்கும் – உலக உணவுக் கழகம்

2020ஆம்ஆண்டைவிட 2021ஆம் ஆண்டு மோசமானதாக இருக்கும் என்று உலக உணவுக் கழகம் எச்சரித்துள்ளது.

மேலும் 2021ஆம் ஆண்டில் மிகப்பெரிய அளவில் பஞ்சம் ஏற்படும். அதனைச் சமாளிக்க பில்லியன் கணக்கான டாலர் செலவிட வேண்டிய தேவையுள்ளது. கொரோனா பாதிப்பைவிட அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து ஊடகங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டதால், உலக அளவில் நாம் எதிர்கொள்ளும் பாதிப்புகள் கவனம் பெறவில்லை எனவும் உலக உணவுக் கழகம் தெரிவித்துள்ளது.