திருப்பதியில் விக்னேஷ் சிவனை மணக்கிறார் நயன்தாரா

n Marriage date and Venue fixed
திருப்பதியில் விக்னேஷ் சிவனை மணக்கிறார் நயன்தாரா

Nayanthara-Vignesh Shivan: நடிகை நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் திருப்பதியில் அடுத்த மாதம் நடக்கிறது.

’நானும் ரவுடிதான்’ திரைப்படத்தில் நடித்தபோது அந்த படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் காதல் வயப்பட்டார் நடிகை நயன்தாரா. கடந்த 6 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில் இவர்கள் திருமணம் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பிவந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் குடும்பத்தார் முன்னிலையில் எளிமையாக நடந்ததாகவும், திருமணம் குறித்து அனைவருக்கும் வெளிப்படையாக அறிவிப்போம் எனவும் நயன்தாரா தெரிவித்திருந்தார்.

‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்பட வெற்றியைத் தொடர்ந்து இவர்கள் திருமணம் விரைவில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், நடிகை நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் திருப்பதியில் ஜூன் மாதம் நடப்பதாக தகவல்கள் உறுதியாகியுள்ளன. திருப்பதியில் சாமிதரிசனம் செய்த நயன் தாரா – விக்னேஷ் சிவன் திருமண ஏற்பாடுகளையும் பார்த்து வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Nayanthara-Vignesh Shivan Marriage date and Venue fixed

இதையும் படிங்க: விக்னேஷ் மரண வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்- எடப்பாடி பழனிசாமி