கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விரும்புகிறேன் – சீமான்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணி கணக்குகள், தேர்தலை எதிர்கொள்ள வியூகம் அமைப்பது என அரசியல் கட்சியினர் காய்நகர்த்தி வரும் நிலையில் இந்த முறையும் நாம் தமிழர் கட்சி தனித்தே களம் காண இருப்பதாக கடந்த செப்டம்பர் மாதத்தில் சீமான் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விருப்பம் தெரிவித்துள்ளார்.