‘800’ படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் – முத்தையா முரளிதரன் அறிக்கை

800 படத்திலிருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என முத்தையா முரளிதரன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து முத்தையா முரளிதரன் விடுத்துள்ள அறிக்கையில்,’நடிகர் விஜய்சேதுபதி அவர்களுக்கு சிலர் தரப்பில் இருந்து கடுமையான அழுத்தம் தருவதை நான் அறிகிறேன். எனவே, என்னால் தமிழ்நாட்டில் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை.

அதுமட்டுமல்லாது, இவருக்கு வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டுவிடக்கூடாது, இதனால் இத்திரைப்படத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலகிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் விஜய்சேதுபதி முத்தையா முரளிதரனின் அறிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் இணைத்து நன்றி, வணக்கம் எனப்பதிவிட்டுள்ளார். இதன்மூலம் விஜய்சேதுபதி மீண்டும் இப்படத்தில் நடிப்பாரா? விலகுவாரா? என குழப்பம் எழுந்துள்ளது.