பெங்களூரு விதான சவுதாவில் அமைச்சரும், எம்எல்ஏவும் தாக்கிய சம்பவம்

கர்நாடக மாநிலத்தில் தற்பொழுது கொரோனா வைரஸ் தொற்று நோய்கள் உள்ள சூழ்நிலையிலும் மாநிலத்தில் சட்டமன்ற கூட்டத்தொடர் தற்பொழுது தொடங்கி நடந்து வருகிறது ஒருபுறம் விவசாயிகள் வேளாண்மை சட்டத்தை மத்திய அரசும் மாநில அரசு திரும்பப் பெற வேண்டும் என கோரி வெளியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று மதியம் 11 மணிக்கு அமைச்சர் நாராயணசாமி மற்றும் சிக்மகளூரு மாவட்டம் கடூர் தொகுதி எம் எல் ஏ பெல்லி பிரகாஷ் சென்ட்ரல் வலாகத்தில் டீ குடிக்கும்போது இருவருக்கும் இடையே தனது தொகுதிக்கு நிதி ஒதுக்கவில்லை என வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொன்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தின் போது அங்கிருந்த அமைச்சர்களும் மற்றும் ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ வும் இருவருடைய சண்டையையும் விலக்கி விட்டுள்ளனர்.

குறிப்பாக பெல்லி பிரகாஷ் அமைச்சர் நாராயணசாமி இடம் எனது தொகுதிக்கு இதுவரை நிதி ஒதுக்கவில்லை எனக் கூறி பலமுறை கேட்டுள்ளார் இப்படி கேட்டுக் கொண்டிருந்த பொழுது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு கை தகறாராக மாறியது ஆத்திரமடைந்த அமைச்சரை பெல்லி பிரகாஷ் வயிற்றில் கையால் குத்தி உள்ளார் அதே போல அமைச்சர் நாரயணசாமியும் கைகளால் எம்எல்ஏ வை தாக்கினார்.

இந்த சூழ்நிலையில் அப்பொழுது எதிர்கட்சி மாநில தலைவர் ஆகிய சித்தராமையா மற்றும் அமைச்சர்கள் ஆகிய சிட்டி ரவி ஈஸ்வரப்பா சோமன்னா ஆகியோரும் உடன் இருந்துள்ளனர்.

இதுபோன்ற சூழ்நிலையில் பாரதிய ஜனதா கட்சி காரர்களே ஒற்றுமையில்லாமல் நிதி வழங்குவதில் அவர்களுக்குள்ளேயே சண்டை போட்டு கொண்டால் மற்ற கட்சி எம் எல் ஏ க்களுக்கு எப்படி இவர்கள் நிவாரண நிதியும் மற்றும் வளர்ச்சி பணியும் செய்து கொடுப்பார் என கேள்வி எழுப்பி உள்ளனர்.

தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியில் இதுபோன்ற உட்பூசல் அடிக்கடி பிரச்சினைகளும் நடந்து வரும் நிலையில் இருவரும் அடிதடி செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here