மீனாட்சியம்மன் திருக்கோயிலில் தொடங்கியது நவராத்திரி கொலு

மீனாட்சியம்மன் திருக்கோயிலில் நவராத்திரி கலைவிழாவை முன்னிட்டு நேற்றிரவு கொலு கோலாகலமாகத் தொடங்கியது.

இன்று (அக்.,18) வாதவூர் அடிகளுக்கு உபதேசம், நாளை (அக்.,19) சுவாமி தன்னைத்தானே பூஜித்தல், நாளை மறுநாள் (அக்.,20) விறகு விற்றல், அக்டோபர் 21ஆம் தேதி கடம்பவன வாசினி, அக்டோபர் 22ஆம் தேதி வேல்வனை செண்டு தொடுத்தல், அக்டோபர் 23ஆம் தேதி அருள்மிகு மீனாட்சி பட்டாபிஷேகம், அக்டோபர் 24ஆம் தேதி மகிஷாசூர மர்த்தினி, அக்டோபர் 25ஆம் தேதி சிவபூஜை அலங்காரங்களில் காட்சியளிப்பார்.