புதிய உச்சத்தில் இந்திய பங்குச்சந்தை!

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குறித்த அறிவிப்பு இன்று வெளியானதைத் தொடர்ந்து இந்திய பங்குசந்தை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெரியளவில் ஏற்றம் கண்டு தனது வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.

அதிகபட்சமாக அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 4.86 விழுக்காடு ஏற்றம் கண்டது. அதேபோல ஐசிஐசிஐ வங்கி, ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், அல்டிராடெக், சன் பார்மா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் ஏற்றம் கண்டன.

மறுபுறம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்.டி.எஃப்.சி. லைஃப், பஜாஜ், பிபிசிஎல்(BPCL) ஹெச்.சி.எல்.டெக் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்தன.