மங்களூரு விமான நிலையத்தில் ரூ.1.36 கோடி தங்கம் பறிமுதல்

Mangalore Airport Gold Seize

Gold Seize: மங்களூரு பஜ்பே சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து வந்த இரு விமானங்களில் கடத்தி வரப்பட்ட‌ ரூ. 1.36 கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் பஜ்பே சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து வந்த இரு விமானங்களில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அதில் விமானங்களில் அங்கிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 1.36 கோடி மதிப்புள்ள 2 கிலோ 468 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். துபாயிலிருந்து விமானத்தில் வந்த பெண் ஒருவர் தனது உடைகள் மற்றும் சானிடிரி பேடில் ரூ.86.89 லட்சம் மதிப்புள்ள1 கிலோ 684 கிராம் 24 கேரட் தங்கத்தையும், துபாயிலிருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணித்த‌ பயணியிடம் ரூ. 49.74 லட்சம் மதிப்புள்ள 946 கிலோ தங்கத்தையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இவ்விரு வழக்குகள் குறித்து பஜ்பே போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

must read : செல்லுபடியாகும் டிக்கெட் இருந்தும் பயணிக்க மறுத்ததால் ஏர் இந்தியாவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்

must read : Prithvi-2 missle: பிருத்வி-2 ஏவுகணை சோதனை வெற்றி

Mangalore Airport Gold Seize