குட்டி சிரஞ்சீவி வந்தாச்சு – மகிழ்ச்சியில் குடும்பத்தினர்!

சிரஞ்சீவி சர்ஜா- மேக்னா தம்பதிக்கு நேற்று (அக்.22) காலை அழகான ஆண் குழந்தை பிறந்தது.

கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா கடந்த ஜூனில் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவு குடும்பத்தினர் மட்டுமின்றி, ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

அவ்வப்போது சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவியும், நடிகையுமான மேக்னா ராஜ் தனது கணவர் குறித்து உருக்கமான பதிவுகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இதற்கிடையில் சிரஞ்சீவி சர்ஜா உயிரிழந்து மூன்று மாதத்திற்கு பிறகு மேக்னாவின் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தனது கணவரின் கட் அவுட்டை அருகில் வைத்து மேக்னா ராஜ் புகைப்படங்கள் எடுத்து தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் சிரஞ்சீவி சர்ஜா- மேக்னா தம்பதிக்கு நேற்று (அக்.22) காலை அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனை சிரஞ்சீவியின் சகோதரர் துருவா சர்ஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நடிகை மேக்னா ராஜ், கர்ப்பமாக இருந்தபோது, உயிரிழந்த கணவர் சிரஞ்சீவி சர்ஜாவை இந்த உலகிற்கு குழந்தை வாயிலாக கொண்டு வருவேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.