தந்தைக்கு கொரோனா உறுதி – சர்வதேச போட்டியில் இருந்து லக்‌ஷயா சென் விலகல்

தந்தைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் சர்வதேச போட்டியில் இருந்து லக்‌ஷயா சென் விலகினார்.

சார்லோர் லக்ஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் களம் இறங்க இருந்த நடப்பு சாம்பியனான இந்திய வீரர் 19 வயதான லக்‌ஷயா சென் கடைசி நேரத்தில் விலகியுள்ளார்.

அவரது தந்தையும், பயிற்சியாளருமான டி.கே. சென்னுக்கு அங்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. மற்ற வீரர்களின் பாதுகாப்புக்கும், போட்டித் தொடருக்கும் அச்சுறுத்தலாக இருக்க வேண்டாம் என்பதாலேயே போட்டியை விட்டு விலகியதாக லக்‌ஷயா சென் கூறியுள்ளார்.