பெண்ணை கொலை செய்துவிட்டு வீட்டில் கொள்ளையடித்த திருடர்களை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்

கர்நாடக மாநிலம் பெங்களூர் ஆனைக்கல் தாலுகா சிங்கன அக்ரஹாரா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனிமையில் இருந்த போது அப்பெண்னை கொலை செய்து விட்டு வீட்டில் இருந்த தங்க நகை மற்றும் பணத்தை கடந்த வாரம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலிசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் பெங்களூர் ஹெப்ப கோடி பகுதியில் ஒரு தனிப்பட்ட பகுதியில் ஒரு வீட்டில் வசித்து வந்தது தெரிந்த போலீசார் அங்கு சென்று வேலு மற்றும் பாலகிருஷ்ணா என்கின்ற கொள்ளையடித்த இரண்டு திருடர்களையும் பிடிக்க ஹெப்ப கோடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கௌதம் மற்றொரு சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் அவர்களை பிடிக்க சென்ற பொழுது வேலு மற்றும் பாலகிருஷ்ணன் இருவரும் போலீஸ்காரர்களை தாக்க முயற்ச்சி செய்தனர்.

இதனால் போலீஸ்காரர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக வேலு மற்றும் பாலகிருஷ்ணா ஆகிய திருடர்கள் இருவரையும் அவர்கள் கால்களில் துப்பாக்கியால் சுட்டு அவர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

தற்போது இருவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு விசாரனை நடந்துவருகின்றது திருடபட்ட நகை பணமும் மீட்கபட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here